கவுண்டமணியின் அந்த வார்த்தயை இன்றும் பின்பற்றுகிறேன் – யோகி பாபு சொன்ன வெற்றி ரகசியம்!

வியாழன், 1 அக்டோபர் 2020 (12:05 IST)
நடிகர் யோகி பாபு கவுண்டமணி சொன்ன ஒரு அறிவுரையைப் பின்பற்றிதான் இன்று முன்னணி நடிகராக வந்துள்ளதாக சொல்லியுள்ளார்.

யோகிபாபு கடந்த ஆண்டு மட்டும் 20 படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக விஜய், நயன்தாரா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஸ்க்ரீன் ஸ்பேசை பகிர்ந்துக்கொண்டுள்ளார். அதே போல் இந்த ஆண்டும் 19 படங்கள் வரை கையில் வைத்து பிஸியான கால்ஷீட்டுடன் உள்ளாராம். தற்போதைய நிலவரத்தில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நகைச்சுவை நடிகர் அவர்தான்.

இந்நிலையில் தன்னுடைய இவ்வளசு பெரிய முன்னேற்றத்துக்குக் காரணம் பற்றி அவர் மனம் திறந்து கூறியுள்ளார். அதில் நகைச்சுவை ஜாம்பவானான கவுண்டமணி ‘எப்போதும் குறிக்கோள் மற்றும் கனவை நோக்கி ஓட வேண்டும், திரும்பி பார்க்கக் கூடாது’  என்று கூறிய அறிவுரையைப் பின்பற்றிதான் தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்