முருகன் கோவிலில் பூஜையுடன் தொடங்கும் வீர தீர சூரன்

புதன், 27 மே 2015 (16:09 IST)
விஷ்ணு நடிக்கும் வீர தீர சூரன் படம் இன்று சென்னை பெசன்ட் நகரிலுள்ள அறுபடைவீடு முருகன் கோவிலில் பூஜையுடன் தொடங்குகிறது.
 
சுசீந்திரன் நடிகர் விஷ்ணுவை வைத்து வீர தீர சூரன் படத்தை இயங்குவதாக இருந்தது. அந்த நேரத்தில் பாண்டிய நாடு வாய்ப்பு வரவே வீர தீர சூரன் தள்ளிப் போனது. 
 
அடுத்தடுத்து வேறு படவாய்ப்புகள் வருவதால் வீர தீர சூரனை இயக்கும் பொறுப்பை சகுனி பட இயக்குனர் சங்கர் தயாளிடம் தந்துள்ளார் சுசீந்திரன். கதை, திரைக்கதை, வசனம் மட்டும் சுசீந்திரன்.
 
விஷ்ணு, கேத்ரின் தெரேஸn நடிக்கும் இந்தப் படத்தை ஏவிஆர் புரொடக்ஷன்ஸ் அன்புவேல் ராஜன் தயாரிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்