ஏப்.23 வெளியாகும் விமலின் காவல் படப் பாடல்கள்

திங்கள், 20 ஏப்ரல் 2015 (16:12 IST)
விமல் தற்போது ‘காவல்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக புன்னகை பூ கீதா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் தேவா, பார்பி ஹண்டா, பாஸ்கர், இமான் அண்ணாச்சி, நமோ நாராயணன், சிங்கமுத்து போன்றோரும் நடித்துள்ளனர்.
 

 
காதல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை நாகேந்திரன் இயக்கியிருக்கிறார். முதலில் இதற்கு நீயெல்லாம் நல்ல வருவடா என பெயரிட்டு இருந்தனர். அந்த தலைப்பிலேயே படப்பிடிப்பும் நடந்து முடிந்தது.
 
பின்னர் திரையுலகினர் உயர் போலீஸ் அதிகாரிகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு படத்தின் சிறப்பு காட்சி திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த எல்லோரும் சிறப்பாக இருப்பதாக பாராட்டி, தலைப்பை மாற்றி விட்டு வேறு பொருத்தமான தலைப்பு வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று ஆலோசனை வழங்கினர். இதையடுத்து பல தரப்பில் ஆலோசித்து இறுதியில் காவல் என பெயர் மாற்றப்பட்டது.
 
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் இசையை ஏப்ரல் 23ம் தேதி வெளியிடவுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்