எலியை பாரு... சுகரு காலி... வடிவேலு விளம்பரம்

திங்கள், 6 ஏப்ரல் 2015 (10:39 IST)
தெனாலிராமன் தோல்விக்குப் பிறகு வடிவேலு நடித்துவரும் படம், எலி. யுவராஜ் இயக்கத்தில் வடிவேலு, சதா நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு என தனி வலைப்பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 

 
அதனை தொடங்கி வைத்த வடிவேலு, வழக்கம் போல தனது பாணியில் பேசினார்.
 
"ஹலோ டியூட்ஸ்... நான் நடிச்சிக்கிட்டு இருக்கிற படம் பேரு எலி. இந்தப் படத்துல காமெடி எலி டிராவல் பண்ணாத ரூட்டே கிடையாது. இதுவொரு காமெடி எலி, கலக்கல் எலி. உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கப் போகிற உங்க வீட்டு எலி.
 
நான் ராகம் போட்டு பேசுறதுனால லோகியம் விற்கிறேன்னு நினைச்சுராதீங்க. உடனே போயி பேஸ்புக், ட்விட்டர்னு இந்த எலியை ஃபாலோ பண்ணி உடம்பில் இருக்குற பிரஷரு, சுகரையெல்லாம் கடாமுடான்னு இறக்கி வைச்சிட்டு கலகலன்னு குடும்பத்தோடு சிரிச்சு மகிழுங்க. மஸ்ட் வாட்ச் த ரேட்" என பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்