வெண்ணீலா கபடி குழு படத்தில் சூரி பரோட்டா சாப்பிடும் போட்டியில் 50 பரோட்டா சாப்பிடுவார். ஆனால் கடைக்காரார் ஒப்புகொள்ளாததால் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து போட்டி தொடங்க வேண்டும் என்றும் தான் மீண்டும் 50 பரோட்டா சாப்பிட போவதாக கூறுவதும் படத்தின் உச்சக்கட்ட நகைச்சுவை காட்சி. அந்த ஒரு நகைச்சுவை காட்சி மூலம் பரோட்டா சூரி என்று பெயரும் எடுத்ததுடன் பிரபலமும் ஆனார்.