இதில், மதுரை மைக்கேல் கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு மட்டும் முடிவடைந்துள்ளது. அடுத்து அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்தில் அவர் நடிக்கும் காட்சிகள் தற்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக படக்குழு தாய்லாந்தில் தங்கியிருந்து படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.
அதற்காக சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் சுமார் 20 பேர் தாய்லாந்திற்கு சென்றிருந்தனர். ஆனால், 20 நாட்களாக அவர்கள் அங்கு தங்கியும் 2 நாட்கள் மட்டுமே முழுமையான படப்பிடிப்பு நடத்தினார்களாம். இதனால், இப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாராம். உடனடியாக அவர்களை சென்னை திரும்பி வரும்படி கூறிவிட்டாராம்.
மேலும், தாய்லாந்தில் எடுக்க திட்டமிட்டிருந்த காட்சிகளை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் எடுக்க சொல்லி விட்டாராம். இதனால், படக்குழுவினர் என்ன செய்வது எனத் தெரியமால் முழித்து வருகிறார்களாம்.