விமானியின் அறையில் நுழைய முயன்ற பீஸ்ட் பட நடிகர்… பரபரப்பு சம்பவம்!

செவ்வாய், 13 டிசம்பர் 2022 (09:02 IST)
மலையாள சினிமாவின் பிரபல நடிகராக இருந்து வருவபர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் பீஸ்ட் படத்திலும் நடித்துள்ளார்.

மலையாளத்தில் பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் ஷைன் டாம் சாக்கோ. விஜய் நடித்த பீஸ்ட் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ஷான் டாம் சாக்கோ.

இந்நிலையில் இவர் நடித்துள்ள பாரத சர்க்கஸ் என்ற படத்தின் ப்ரமோஷனுக்காக படக்குழுவோடு துபாய் சென்றிருந்தார். நிகழ்ச்சிகளை முடித்து மீண்டும் கொச்சி திரும்பிய போது விமானத்தில் திடீரென அவர் விமானியின் அறையில் நுழைய முயன்றுள்ளார்.

இதனால் அவரை பிடித்து விமானத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர். பின்னர் அவரை விசாரித்த பின்னரே வேறு விமானத்தில் அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி சாக்கோ தரப்பில் “விளையாட்டுக்காக அப்படி செய்ய முயன்றதாக” விளக்கம் அளித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்