கெளதம் மேனன் ஸ்டைலில் மனைவியை வித விதமாய் ரசித்து படம் பிடித்த நடிகர் சாந்தனு - வீடியோ!

Webdunia
வெள்ளி, 8 மே 2020 (08:02 IST)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் கீர்த்தி. இவர் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கீர்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதற்கிடையில் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார். திருமணம் ஆன பிறகும் கேரியரில் தான் நினைப்பதை தொடர்ந்து சாதித்து வருகிறார் கீர்த்தி. இதேபோல் அவரது கணவர் சாந்தனுவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் அவருக்கு மாணவராக நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சந்தனு தனது மனைவியை சூரியன் அஸ்தமிக்கும் அழகான மாலை வெளியில் நிற்கவைத்து வித விதமாய் போட்டோஸ் எடுத்துள்ளார். அதனை கெளதம் மேனனின் மின்னலே பட பாடலை கொண்டு எடிட் செய்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ லிங்க்...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Aweeeee❤️ Shot n edited by ❤️ @shanthnu ❤️

A post shared by Kiki Vijay

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்