சாந்தனுக்கு இதுவரை போல்டான கதாபாத்திரம் அமையவில்லை. காதலியிடம் வழியும் கதாபாத்திரங்களே கிடைத்தன. தனது தோல்விக்கு இந்த கதாபாத்திரங்களும் ஒரு காரணம் என நினைக்கிறார். அதனால், போல்டான கதாபாத்திரங்கள் உடைய கதையில் மட்டுமே நடிப்பதென முடிவு செய்துள்ளார். முப்பரிமாணம் அப்படி தீர்மானித்து ஒப்புக் கொண்ட படம்.
அதிரூபன் என்பவர் இயக்கும் இந்தப் படம் ரொமான்டிக் த்ரில்லராக தயாராகிறது. சிருஷ்டி டாங்கே நாயகி. முக்கியமான வேடத்தில் அப்புகுட்டி நடிக்கிறார். காதலை இன்னொரு பரிமாணத்தில் சொல்லும் கதையம்சம் கொண்டதாம் இந்தப் படம். மேலும், நாயகன், நாயகி, அப்புக்குட்டி என்ற மூவரை சுற்றி நடக்கிற கதை. அதனால் முப்பரிமாணம் என பெயர் வைத்துள்ளனர்.