அப்பாவின் ஃ பேவரைட் உணவு! டாடிக்கு தெரியாம பார்த்துகோங்க சாந்தனு! கசமுசா ஆகிடப்போகுது!

திங்கள், 3 ஜூன் 2019 (15:08 IST)
முருங்கைக்காய் என்றவுடன் சட்டன்று நம்  நினைவிற்கு வரும் நடிகர் யார் என்றால் அது பாக்கியராஜ் தான். அவர்  இயக்கி நடித்த பல படங்களில் முருங்கைகாயை வைத்து பல டபுள்  மீனிங் காமெடிகள் வந்திருப்பதை ரசிகர்கள் அறிவார்கள். திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர்  கே. பாக்யராஜ். இன்றைக்கும் சினிமாவுக்கு வரும் ஒவ்வொரு இயக்குனருக்குள்ளும் பாக்யராஜ் மாதிரி ஸ்கிரிப்ட் பண்ண வேண்டும என்பதுதான் நோக்கமாக இருக்கும். அந்த அளவுக்கு பலரை பாதித்தவர் பாக்யராஜ்.
பாக்யராஜ் தான் இயக்கம் பல படங்களில் பல்வேறு நாயகிகளுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஆனால் அவருக்கு  ஏற்ற ஜோடி நடிகை  ஊர்வசி தான். அவர்கள் இருவது நடிப்பில் வெளிவரும் படங்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். அப்படி அவர்களது நடிப்பில் வெளிவந்து மாபெரும் ப்ளாக் பஸ்டர் அடித்த படம் முந்தானை முடிச்சி . அந்த படத்தில்  முருங்கைகாயை வைத்து வரும் ஒரு காட்சி ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அந்த படத்திற்கு பின்னர் தான் பாக்யாராஜ் முருங்கைக்காய் பாக்யராஜ்  ஆனார். 


 
இந்த நிலையில் அவரது மகன் நடிகர் சந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வீட்டில் சமைத்த முருங்கக்காய் பொரியலை புகைப்படம் எடுத்து அதனை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் சாந்தனுவை எப்படியெல்லாம் கலாய்த்து வருகிறார்கள் என நீங்களே பாருங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்