பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக நடிகர் பேச்சு!

செவ்வாய், 15 ஜூன் 2021 (13:40 IST)
சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா என்பவர் மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து அவர் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது

சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா என்பவர் மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து அவர் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் வெளிநாடு தப்பி செல்ல முடியாத வகையில் லூகவுட் நோட்டீஸ் வழங்க சிபிசிஐட் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலிக்காக சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனை அடுத்து அவரிடம் விசாரணை செய்ய சிபிசிஐடி தனிப்படை குழுவினர் விரைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அங்கு அவருடன் விசாரணை செய்துவிட்டு பின்னர் அவரை கைது செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் அவரை கைது செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவசங்கர் பாபாவின் சிஷ்யரான நடிகர் சண்முகராஜன் அவருக்கு ஆதரவாக செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ‘பாபாவுடன் நான் நான்கு வருடங்களாக இருந்து வருகிறேன். அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் துளி கூட உண்மை இல்லை. இந்த பொய் குற்றச்சாட்டுக்கு காரணம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட முன்னாள் மாணவர்கள் அமிர்தா பாலாஜி, ஆசிப் ஆகியவர்கள்தான்.

பாபாவுக்கு சாதி மதம் என்ற பாகுபாடு கிடையாது. அவருக்கு பெண்கள் மீது நாட்டம் கிடையாது. இந்த விவகாரத்தால் பாபாவின் சீடர்கள் 50 லட்சம் பேர் மன உளைச்சலில் உள்ளோம். நாங்கள் ஒவ்வொருவராக இனிமேல் பாபாவுக்கு ஆதரவாக கருத்து சொல்வோம். சரியான விளக்கத்தை பள்ளி நிர்வாகம் அளிக்காததால்தான் போக்ஸோ அளவுக்கு சென்றுள்ளது. பள்ளி நிர்வாகத்தை விளக்கம் அளிக்கச் செய்யச் சொல்லி போராட்டம் நடத்த உள்ளோம்.’ எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்