மலையாளத்திலும் வெளியாகும் மம்முட்டியின் பேரன்பு

செவ்வாய், 26 ஜூலை 2016 (15:38 IST)
இயக்குனர் ராமின் தரமணி இன்னும் வெளியாகாத நிலையில், மம்முட்டி, அஞ்சலியை வைத்து பேரன்பு என்ற படத்தை இயக்கி வருகிறார். பல வருடங்களுக்குப் பிறகு மம்முட்டி நடிக்கும் படம்.


 

 
கேரளாவில் தமிழ்ப் படங்களை மலையாளத்தில் டப் செய்யாமல் அப்படியே தமிழில் வெளியிடுவதுதான் வழக்கம். பேரன்பு படத்தையும் தமிழிலேயே வெளியிடுவதாகத்தான் இருந்தனர். தற்போது மலையாளத்திலும் படத்தை வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளனர்.
 
அல்போன்ஸ்புத்திரனின் நேரம் படம் தமிழ், மலையாளம் இரு மொழிகளில் வெளியானது. தமிழில் நடித்த பல நடிகர்கள் மலையாள பதிப்பில் மாற்றப்பட்டனர். அந்தவகையில் அதனை இரு மொழிகளில் தயாரான படம் என்பதே சரியாகும். 

வெப்துனியாவைப் படிக்கவும்