இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். அசுரனுக்கு பிறகு மீண்டும் தென் தமிழகம் சார்ந்த கதையில் தனுஷ் நடிப்பதாலும், மாரி செல்வராஜின் இரண்டாவது படம் என்பதாலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கர்ணன் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டரில் கர்ணன் டீசர் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். அதனால் வரும் வாரத்தில் கர்ணன் டீசர் வெளியாகலாம் என்றும், திரைப்படம் மே மாத கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.