இந்த நிலையில் இன்றைய சட்டமன்ற கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் எம்.எல்.ஏவுமான் கருணாஸ் கூறியபோது, 'நடிகர் கமலஹாசன் மீது தொடர்ந்து நன்மதிப்புகளை வைத்துள்ளேன். சிஸ்டம் சரியில்லை என்று விமர்சனம் செய்தால் மட்டும் போதாது, களத்திற்கு வந்து போராட வேண்டும். சிஸ்டத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு கமல்ஹாசன் உள்பட அனைவருக்கும் உண்டு என்று கூறினார்.