மாதவன், விஜய் சேதுபதி போன்ற சில நடிகர்கள் மட்டுமே ரசிகர் மன்றங்கள், பெயருக்கு முன்னால் பட்டப்பெயர்கள் போன்றவற்றை விரும்புவதில்லை. சூர்யா, கார்த்தியையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால்,கொம்பன் படத்திலிருந்து கார்த்தியின் ரசிகர்கள் அவரை புரட்சி வீரன் என்ற அடைமொழியாடு அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தோழா படத்துக்காக ரசிகர்கள் அடித்த போஸ்டர், கட்டிய பேனர் என அனைத்து இடங்களிலும் புரட்சி வீரன் பளீரிடுகிறது.