ஜீவன் நடிப்பில் மாயி இயக்குனரின் அதிபர்

புதன், 15 ஏப்ரல் 2015 (14:34 IST)
சரத்குமார் நடித்த மாயி உள்பட சில படங்களை இயக்கியவர், சூரிய பிரகாஷ். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவன் நடிப்பில், அதிபர் என்ற படத்தை இயக்குகிறார்.
 
செத்தாலும் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன் என்ற கொள்கை உடைய சிவாவுக்கும், நம்பிக்கை துரோகமே வாழ்க்கையாகக் கொண்ட ஈஸ்வரனுக்குமிடையே நடக்கும் போராட்டமே, அதிபர்.
 
இதில் சிவாவாக ஜீவனும், ஈஸ்வரனாக ரஞ்சித்தும் நடிக்கின்றனர்.
 
படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. சென்னை, பாண்டிச்சேரி, மலேசியா, பாங்காக், லங்காவி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்திற்கு விக்ரம் செல்வா இசையமைக்கிறார். பிலிப் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நா.முத்துக்குமார், விவேகா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்