ஓட்டு வேட்டை - விஷாலின் பாண்டவர் அணி நான்கு நாள் சுற்றுப்பயணம்

புதன், 7 அக்டோபர் 2015 (09:02 IST)
நடிகர் சங்க தேர்தல் வரும் 18 -ஆம் தேதி நடக்கிறது. அதில் எப்படியும் வென்றுவிடுவது என்ற முனைப்பில் இரு அணிகளும் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன.


 
 
விஷாலின் தலைமையிலான பாண்டவர் அணி நான்கு நாள் சுற்றுப் பயணத்துக்கு திட்டமிட்டுள்ளது.
 
நாடக நடிகர்களே நடிகர் சங்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிப்பவர்கள். அவர்களிடம் ஓட்டு சேகரிக்க திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, கோவை, சேலம், கரூர், நாமக்கல் ஆகிய பகுதிகளுக்கு விஷால் அணியினர் தனி பேருந்தில் செல்கின்றனர்.
 
தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷால், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் கார்த்தி, மற்றும் ஜூனியர் பாலையா, குட்டி பத்மினிஇ ராஜேஷ், கோவை சரளா, நந்தா, ஸ்ரீமன், ரமணா, பிரசன்னா, உதயா, பூச்சி முருகன், சங்கீதா, சோனியா உள்ளிட்ட செயற்குழு பதவிகளுக்கு போட்டியிடும் 24 பேர் அந்த பஸ்சில் பயணமாகிறார்கள்.
 
 
அவர்களுடன் ஆதரவு நடிகர்களும் செல்கிறார்கள். மொத்தம் 40 பேர் செல்கின்றனர். இவர்கள் 4 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துக் கூட்டங்கள் நடத்தி நாடக நடிகர்களிடம் ஓட்டு கேட்கின்றனர்.
 
 
சென்னையில் வருகிற 16 ஆம் தேதி ஆதரவாளர்கள் கூட்டத்தையும் கூட்டி உள்ளனர். இந்த கூட்டத்தில் நடிகர்கள், மற்றும் நாடக நடிகர்-நடிகைகளை திரட்டி தங்கள் பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்