அதிரடி அமலா பால்

சனி, 26 நவம்பர் 2016 (10:56 IST)
கணவரை பிரிந்துவிட்டார் என்ற அறிவிப்பு வந்ததும் அமலா பாலுக்கு புதிய படங்களின் வரத்து குறைந்தது. ஆனால், அது தற்காலிகம்தான். தற்போது அவர் கைவசம் அரை டஜனுக்கும் மேல் படங்கள்.

 
வடசென்னை, வேலையில்லா பட்டதாரி 2, திருட்டு பயலே 2, ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் என்று தமிழில் நான்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். கன்னடத்தில் ஒன்று, தெலுங்கில் இரண்டு என எண்ணிக்கை ஏழை தொடுகிறது. இதுதவிர மலையாளப் படங்கள்.
 
தொடர்ந்து நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும், நடிப்புதான் இப்போதைக்கு என்னுடைய ஒரே கனவு லட்சியம் எல்லாம் என்றார் அமலா பால்.
 
அசத்துங்க.
 

வெப்துனியாவைப் படிக்கவும்