அக்ஷரா ஹாசன் நடிப்பில் "அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு" டீசர் வெளியீடு!

வியாழன், 24 செப்டம்பர் 2020 (14:28 IST)
"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு " டீசர் ரிலீஸ்

பிரபல பின்னணி பாடகி உஷா உதுப் பாட்டியாகவும், கமல்ஹாசனின் மகள் அக்சராஹாசன் பேத்தியாகவும் நடித்து வரும் படம்  "அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு". இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ’டிரண்ட் லவுட்’ என்ற நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான இந்த படத்தில் அக்சரா ஹாசன் ஆக்சன் நாயகியாக நடிக்கின்றார். ராஜாகிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளது. இதோ அந்த டீசர் லிங்க்...

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்