பிக்பாஸ் வீட்டில் எக்ஸ் காதலனுடன் நெருக்கமாக இருந்த அபிராமி!

புதன், 2 மார்ச் 2022 (18:31 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஒன்றாக மாறியது. பிக்பாஸ் நிறைவடைந்த பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு அதில் பழைய போட்டியாளர்கள் கலந்துக்கொண்டு விளையாடி வருகின்றனர். 
 
இந்நிலையில் பிக்பஸ் நிரூப் யாஷிகாவின் காதலன் என்பது மட்டும் தான் ஆடியன்ஸ் பலருக்கும் தெரியும். ஆனால், யாஷிகாவுக்கு முன்னரே அவர் அபிராமியை காதலித்து வந்தது இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் மக்களுக்கு தெரியவந்தது. அதை அபிராமியே சக போட்டியாளர்கள் முன்னிலையில் கூறி அதிர வைத்தார். 
 
இந்நிலையில் தற்போது  அதைவிட அதிர்ச்சியளிக்க கூடிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஆம், பாலா மற்றும் அபிராமி ஸ்மோகிங் அறையில் கொஞ்சம் நெருக்கமாக நடந்துக்கொண்டதாக நெட்டிசன்ஸ் கூறி வருகின்றனர். இதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எடிட் செய்து வெளியிட்டுள்ளனர் என பேசப்பட்டு வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்