உதவி இயக்குனரை திருமணம் செய்தது ஏன்? – நடிகை ஆனந்தி விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (08:46 IST)
பிரபல நடிகை ஆனந்தி உதவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து பேசியுள்ளார் ஆனந்தி

தமிழில் பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலமாக அறிமுகமானவர் கயல் ஆனந்தி. தொடர்ந்து பரியேறும் பெருமாள், த்ரிஷா இல்லைனா நயன்தாரா உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழில் பிரபலமான இவர் சில நாட்களுக்கு முன்னதாக உதவி இயக்குனராக பணி புரிந்து வரும் சாக்ரடீஸ் என்பவரை மணம் செய்துக் கொண்டார்.

நடிகை ஒருவர் உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து ஆனந்தியே விளக்கம் அளித்துள்ளார். அதில் “நானும் சாக்ரடீஸும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்திருந்தோம். அந்த நாள் தற்போது நடந்துள்ளது” என கூறியுள்ளார்.

ஆனந்தி அடுத்து நடித்து வரும் அலாவுதீன் அற்புத கேமரா உள்ளிட்ட படங்களிலும் சாக்ரடீஸ் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்