”நான் தூங்கி 48 மணிநேரம் ஆகிவிட்டது… புண்படுத்தி இருந்தால்..” நடிகர் அமீர்கான் வருத்தம்!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (15:13 IST)
நடிகர் அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது.  இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

லால் சிங் சத்தா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமீர்கான் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதால் இந்தியா முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தை தமிழில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமீர்கான் “இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது” என்று கூறியதை அடுத்து அவர் தேசபக்தி அற்றவர் எனக் கூறி “தற்போது லால்சிங் சத்தா படத்தைப் புறக்கணிப்போம்” என சிலர் ஹேஷ்டேக் உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். இதுபற்றி முன்பே பேசிய அமீர்கான் “நான் நமது நாட்டை நேசிக்கவில்லை என சிலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை. என் படத்தை புறக்கணிக்காமல் அனைவரும் பாருங்கள்” எனக் கூறியிருந்தார்.

ஆனாலும் தொடர்ந்து அதுபோன்ற ஹேஷ்டேக்குகள் பரப்பப்பட்டு வரும் நிலையில் தற்போது அமீர்கான் விளக்கம் அளித்துள்ளார். அதில் “நான் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என் படத்தை யாராவது பார்க்கவேண்டாம் என நினைத்தால் நான் அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். இந்த படம் குறித்து எனக்கு பதற்றமாகதான் இருக்கிறது. நான் தூங்கி 48 மணிநேரம் ஆகிறது. என்னால் தூங்க முடியவில்லை. படத்தைப் பற்றி மறக்க ஆன்லைனில் செஸ் மற்றும் புத்தகங்கள் படிப்பது என கழித்து வருகிறேன். ஆகஸ்ட் 11 க்குப் பிறகுதான் என்னால் உறங்கமுடியும் எனக் கருதுகிறேன்.” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்