ஆலுமா டோலுமா... அஜித் ரசிகர்கள் கொண்டாட ஒரு வாய்ப்பு

செவ்வாய், 1 நவம்பர் 2016 (16:27 IST)
கபாலி 100 -வது நாள் மற்றும் தீபாவளியை முன்னிட்டு சென்னை ரோகிணி காம்ப்ளக்சில் கபாலி திரையிடப்பட்டது. ரசிகர்கள் அதிக அளவில் கபாலி திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.

 
அதேபோல் விஜய்யின் தெறி திரைப்படமும் தீபாவளிக்கு திரையிடப்பட்டது. அஜித் ரசிகர்களை மட்டும் அம்போவென்று விட்டால் சரியா?
 
அஜித்தின் கடைசிப் படமான வேதாளம் சென்ற நவம்பர் 10 -ஆம் தேதி வெளியானது. அதனால் வரும் நவம்பர் 10 ரோகிணியில் வேதாளத்தை திரையிடுகின்றனர். அஜித் ரசிகர்கள் ஆலுமா டோலுமாவுக்கு ஆட இன்னொரு வாய்ப்பு... பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்