தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஷங்கரின் சிஷ்யர் அட்லீ. ராஜா ராணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களையும் இயக்கினார்.. அப்படியே பாலிவுட் போய் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தையும் இயக்கினார். இந்த படம் 1300 கோடி வசூலை பெற்றது..
தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜுனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இந்த படத்தில் ஹாலிவுட் கலைஞர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த படத்தின் கதையையே ஹாலிவுட் எழுத்தாளரோடு இணைந்து அட்லி உருவாக்கியிருக்கிறார்..
எனவே இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்த படத்தில் ராக்கா என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அல்லு அர்ஜூனி கெட்டப்பே வேறு மாதிரி இருக்கிறது. அவரின் கை விரல்களும் நகங்களும் ஒரு விலங்கு போல உருவாக்கியிருக்கிறார்கள்.. இந்த போஸ்டர் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது..