இயக்குனர் பாலா தன் நண்பர் விக்ரம்முக்காக அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தை வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால் அந்த படம் விக்ரம்முக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் திருப்தி இல்லாததால் அந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என முடிவெடுத்தனர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு படம் முழுவதுமாக எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் வேறு இயக்குனரால் எடுக்கப்பட்டது இல்லை. சீனியர் இயக்குனரான பாலாவுக்கு இது மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தனது அடுத்த படத்தை எப்படியாவது மிகப்பெரிய ஹிட் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். இதற்காக எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுதியுள்ள கதை ஒன்றை பாலா இயக்க உள்ளார். அந்த படத்தில் ஜி வி பிரகாஷ் மற்றும் அதர்வா ஆகிய இருவரும் நடிக்க உள்ளனர். இந்நிலையில் பாலா படத்துக்கு எப்போதும் இசையமைக்கும் இளையராஜாவுக்கு பதில் ஏ ஆர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்துள்ளாராம் பாலா.