பாகுபலி2 படம் பார்த்தேன் - பிரமித்த ஏ.ஆர்.ரஹ்மான்

திங்கள், 22 மே 2017 (12:04 IST)
சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி2 படத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டி தள்ளியுள்ளார்.


 

 
பாகுபலி படம் வெளியான 3 வாரங்களில் ரூ.1500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதுவரை, இந்திய சினிமாவில் எந்த திரைப்படமும் இவ்வளவு பெரிய தொகையை வசூலிக்கவில்லை. இப்படத்தை திரையுலகை சேர்ந்த பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

 
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “ பாகுபலி2 படத்தை இப்போதுதான் பார்த்தேன். ராஜமௌலி, கீரவாணி மற்றும் இப்படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த படம் ரூ.2 ஆயிரம் கோடி வசூலை தாண்டி செல்லும். நீங்கள் தென்னிந்திய சினிமாவிற்கு, உலக அரங்கில் ஒரு புதிய கதவை திறந்து வைத்து அடையாளம் கொடுத்துள்ளீர்கள்” என பாராட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்