ஏ.ஆர்.ரஹ்மானின் சவுண்ட் என்ஜினியரை மணக்கும் விக்ரம் குமார்

செவ்வாய், 7 ஜூன் 2016 (11:52 IST)
யாவரும் நலம், 24 படங்களை இயக்கிய விக்ரம் குமாருக்கும், ஏ.ஆர்.ரஹ்மானிடம் சவுண்ட் என்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீநிதி வெங்கடேசனுக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.


 


இவர்களின் திருமணம் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கிறது.
 
விக்ரம் குமாரின் 24 படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் போது ஸ்ரீநிதி வெங்கடேசனுக்கும் விக்ரம் குமாருக்கும் அறிமுகமாகி, அது காதலாகி இப்போது திருமண நிச்சயதார்த்தத்தில் முடிந்துள்ளது. 
 
செப்டம்பரில் இவர்களின் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடக்கிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்