புதிய கிளைமாக்ஸ் காட்சியில் விஷவல் எஃபெக்ட்ஸ், கிராபிக்ஸ் ஆகிய பணிகளை செய்து முடிக்க குறைந்தது 3 மாத காலம் ஆகும் என்பதால் ‘ஸ்பைடர்’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், அனேகமாக இந்த படம் வரும் தீபாவளியில் தான் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
மகேஷ்பாபு, ராகுல்ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகிறது.