ரஜினி படத்துக்கு மட்டும் தான் இப்படி! 2.o படம் பார்க்க விடுமுறை அறிவித்த பிரபல நிறுவனம்

வியாழன், 29 நவம்பர் 2018 (07:19 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் வருகிறது என்றால் தியேட்டர்களில் கோலாகல கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.

ரசிகர்கள் திருவிழா போல ரஜினி படத்தை வரவேற்பார்கள். அந்த வகையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் ரஜினி கைகோர்த்துள்ள 2.o  படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தை இன்று எப்படியும் பார்த்து விட வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள் . இதற்காக வேலைக்கு இன்று மட்டம் போடுவதும் நடக்கும்.
 
இந்நிலையில் இன்று வேலை நாள் என்பதால் 2.0 பார்க்க பணியாளர்களுக்கு விடுமுறை அறிவித்து ஒரு பிரபல நிறுவனம் ஆச்சர்யம் அளித்துள்ளது.
 
கோயம்பத்தூரில் உள்ள ஒரு கம்பெனி தான் இப்படி செய்துள்ளது .
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்