2020- ஆண்டில் மறக்கமுடியாத நிகழ்வுகள்…ஒரு பார்வை

வெள்ளி, 11 டிசம்பர் 2020 (23:34 IST)
இந்த வருடம்-2020 மனிதர்களால் மறக்கவே முடியாத பல நிகழ்வுகளையும் இழப்புகளையும் போராட்டத்தையும், உயிர் பயத்தையும் , வேலையிழப்புகளையும், வறுமையும், பிணியையும், ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் நாம் நினைத்துப்பார்க்க முடியாத சில நல்லவைகளும் நடத்துள்ளது. அதுகுறித்ததான கட்டுரையே இது.

இந்திய சினிமாவில் முன்னணிப் பாடகராகவும், நடிகராகவும் டப்பிங் கலைஞராகவும், தயாரிப்பாளரும், இசையமைப்பாளரும் கோலோட்சியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.  இவர் கடந்த  1946 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி பிறந்தார்.

இவர் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி தனது 74 வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அதிலிருந்து எஸ்.பி.பி குடும்பத்தினர் முதல் பலரும்  மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று, மறைந்த பாடகர் எஸ்.பி.பின் நினைவாக கோவையில் இசை வனம் அமைக்கப்பட்டுள்ளது.

பச்சாபாளையம் பகுதியில் சிறுதுளி அமைப்பு மற்றும் பேரூர் செட்டிபாளையம் சார்பில் 74 மரக் கன்றுகள் நடவு செய்யும் பணியை நடிகர் விவேக் துவக்கிவைத்தார் . இவரது பெயரில் தென்னிந்திய டப்பிங் ஸ்டுடியோவில் ஒரு டப்பிங் அறைக்கு இவர் பெயர் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்