ஏ.எல்.விஜய் - ஜெயம் ரவி - ஹாரிஸ் ஜெயராஜ்

திங்கள், 4 ஜூலை 2016 (18:07 IST)
ஏ.எல்.விஜய் தற்போது தேவி என்ற படத்தை பிரபுதேவா, தமன்னாவை வைத்து இயக்கி வருகிறார். 


 
 
மலையாளத்தில் வெற்றி பெற்ற சார்லி படத்தை மாதவனை வைத்து தமிழில் ரீமேக் செய்ய உள்ளார். அத்துடன் ஜெயம் ரவி நடிக்கும் படத்தையும் இயக்குகிறார்.
 
ஜெயம் ரவி அரை டஜன் இயக்குனர்களுக்கு, கால்ஷீட் தருகிறேன் என்று வாக்களித்துள்ளார். எப்போதும் போல் ஏ.எல்.விஜய் அதில் முந்துகிறார். இவர்கள் இணையும் படம் வருட இறுதியில் தொடங்குகிறது.
 
முதல்கட்டமாக ஹாரிஸ் ஜெயராஜை ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்போதே கேட்டால்தான் அடுத்த வருட பொங்கலுக்கு முதல் டியூன் கிடைக்கும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்