மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில்,நடிகர் சந்தோஷ் நம்பிராஜன்,நடிகை ரவீனா ரவி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள வெளியான வட்டார வழக்கு படம் கடந்த 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் கோவை ப்ராட்வேஸ் சினிமாஸில் ரசிகர்களை சந்தித்த வட்டார வழக்கு திரைப்பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய படத்தின் இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன்,இது 1985-ல் நடப்பது போன்ற கதை களத்தை கொண்ட இதில், யாரும் செருப்பு அணிந்திடாத ஒரு வட்டாரத்தில் நடக்கும் வழக்கை இந்தப் படம் பேசுவதால் வட்டார வழக்கு என்று தலைப்பு வைத்துள்ளதாக தெரிவித்தார்.
மதுரை மேற்கு பகுதியில் உள்ள கிராமத்துப் பின்னணியில் படம் உருவாகி உள்ள படமாக கிராமத்து பின்னனியில் இருப்பதால்,இசைஞானியை அணுகியதாக குறிப்பிட்ட அவர்,இந்த படத்தில் அவரது இசைதான் ஹீரோ என்றார்.
அவரது இசை, இந்தப் படத்துக்குப் பெரியபலம் என்று கூறிய அவர்,என்னிடம் போதுமான பொருளாதாரம் இல்லாத போதும். அவர் எந்த வித எதிர்பார்ப்புமின்றி அவரே விரும்பி இந்த படத்திற்கு இசையமைத்தார் என நெகழ்ச்சி பட தெரிவித்தார்..