பாங்காக்கில் படமாகும் தள்ளிப் போகாதே பாடல்

திங்கள், 12 செப்டம்பர் 2016 (17:21 IST)
அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம்பெற்றுள்ள, தள்ளிப் போகாதே பாடலை பாங்காக்கில் படமாக்கியுள்ளனர்.

 
ரஹ்மான் இசையில், கௌதம் இயக்கிவரும் இந்தப் படத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ளனர். படம் இறுதிகட்டத்தில் இருக்கையில் சிம்பு சம்பளப் பிரச்சனையை கிளப்பினார். அதனால், தள்ளிப் போகாதே பாடலை படமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அந்தப் பாடல் இல்லாமல் படம் வெளியானால் அதற்கு சிம்புதான் பொறுப்பு என்று கௌதம் கோபமாக பேட்டி தந்தார்.
 
படவெளியீடு தள்ளிப் போவதால், பாடலை படமாக்க சிம்பு ஒப்புக் கொண்டார். பாங்காக்கில் இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பிற வேலைகள் முடிவடைந்துவிட்டதால் பாடலை மட்டும் இணைத்து செப்டம்பர் 30 -ஆம் தேதியே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்