தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாகவே இரண்டாம் பாகம் எடுக்கும் சீசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ரஜினி, கமல் படங்கள் உள்பட பல திரைப்படங்கள் இரண்டாம் பாகங்களாக வெளி வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ’96’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல் தற்போது வெளிவந்துள்ளது. விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கிய ’96’ திரைப்படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது
விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகிய இருவரும் மீண்டும் இரண்டாம் பாகத்திலும் மீண்டும் நடிப்பார்கள் என்றும் மேலும் ஒரு முக்கிய நடிகை இந்த படத்தில் இடம் பெறுவார் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 96 படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவதால் விஜய்சேதுபதி த்ரிஷா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்