71வது பிறந்தநாள் 71,000 மரக்கன்றுகள்

புதன், 28 மே 2014 (18:24 IST)
இசைஞானி இளையராஜாவின் 71வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட அவரது ரசிகர் மன்றத்தினர் தீர்மானித்துள்ளனர்.
 
கடந்த ஏப்ரல் மாதம் மதுரை தமுக்கம் மைதானத்தில் இளையராஜா ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. இளையராஜாவின் பெயரில் உலகம் முழுவதும் ரசிகர் மன்றங்கள் இயங்கிக் கொண்டிருந்தாலும் இளையராஜாவின் ஒப்புதல் பெற்ற அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம் கடந்த ஏப்ரல் மாதமே தொடங்கப்பட்டது. 
இளையராஜாவின் ரசிகர்கள் ஆர்வமுடன் இந்த மன்றத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். குறுகிய காலத்தில் இந்த மன்றத்தில் ஒரு கோடி பேர் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
 
ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் இளையராஜாவின் 71வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். கேக் வெட்டி கொண்டாடும் ஆடம்பர பிறந்தநாள் விழாக்களுக்கு எதிரானவர் இளையராஜா. அதனால் 71வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 71,000 மரக்கன்றுகளை நட அவர்கள் முடிவு செய்துள்ளனர். 
 
ஜூன் 2 இளையராஜாவின் 71வது பிறந்தநாள்.

வெப்துனியாவைப் படிக்கவும்