5 வருடங்களாக ‘ஏ’ சர்ட்டிஃபிகேட் வாங்காத அஜித்

வியாழன், 13 ஜூலை 2017 (18:43 IST)
கடந்த 5 வருடங்களில் வெளியான அஜித் படங்கள் எதுவுமே ‘ஏ’ சான்றிதழ் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 

 
2012ஆம் ஆண்டு வெளியான ‘பில்லா 2’ படத்தை, சக்ரி டோலட்டி இயக்கியிருந்தார். 2007ஆம் ஆண்டு வெளியான ‘பில்லா’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. அஜித், பார்வதி ஓமனகுட்டன், வித்யுத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். வன்முறைகள் அதிகமாக இருப்பதாகக் கூறி, இந்தப் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு.

ஆனால், அதன்பிறகு வெளியான அஜித் படங்கள் எதுவுமே ‘ஏ’ சான்றிதழ் பெறவில்லை. வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிக்கும் அஜித், கடந்த 5 வருடங்களில் 5 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அதில், 4 படங்கள் ‘ஏ’ சான்றிதழ் பெறவில்லை. விரைவில் ரிலீஸாகவுள்ள ‘விவேகம்’ படத்துக்கு என்ன சான்றிதழ் கிடைக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்