ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த பட டைட்டில் இதுதான்!

செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (12:42 IST)
ரஜினி அஜித் விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய ஏஆர் முருகதாஸ் தற்போது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கி உள்ளார். அவர் இயக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது
 
இந்நிலையில் ஏஆர் முருகதாஸ் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். அவரிடம் உதவியாளராக இருந்த பொன்குமரன் என்பவர் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை அவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஓம்பிரகாஷ் என்பவருடன் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த படத்திற்கு ’1947’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பெரும்பாலான புதுமுகங்கள் நடிக்க இருப்பதாகவும் ஒரு சில முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்