14 தையல்ளுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஷால்

புதன், 30 ஏப்ரல் 2014 (18:33 IST)
விஷால் ஹரியின் பூஜை படத்தின் சண்டைக் காட்சியில் நடித்த போது அவரது விரல் கிழிந்து 14 தையல்கள் போடப்பட்டன. ஒருவாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் மறுநாளே அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
பூஜை படத்தின் சண்டைக் காட்சி சென்னை மோகன் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில் படமாக்கப்பட்டது. கனல் கண்ணன் சண்டைக் காட்சியை அமைத்தார். விஷால் கையை ஓங்கி வீசிய போது அவரது கை தகரத்தில் மோதி நடுவிரல் கிழிந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விரலில் 14 தையல்கள் போடப்பட்டன.
 
ஒரு வாரமாவது ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியும் அடுத்த நாளே சென்னை இசிஆர் பகுதியில் நடந்த படப்பிடிப்பில் கையில் கட்டோடு விஷால் கலந்து கொண்டார்.
 
பூஜை படத்தில் விஷாலுடன் ஸ்ருதி நடிக்கிறார். விஷாலின், விஷால் ஃபிலிம் ஃபேக்டரி படத்தை தயாரிக்கிறது. 
 
படத்தை அறிவிக்கும் போதே தீபாவளிக்கு படம் வெளியாகும் என ரிலீஸ் தேதியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்