ஹைதராபாத்தில் மாப்பிள்ளை

புதன், 12 ஆகஸ்ட் 2009 (16:45 IST)
ர‌ஜினியின் மாப்பிள்ளை படத்தின் ‌‌ரீமேக்கில் தனுஷ் நடிப்பது தெ‌ரியும். சுரா‌ஜ் இயக்கும் இந்த ‌‌ரீமேக்கிற்கு மாப்பிள்ளை என்றே பெயர் வைத்துள்ளனர். தனுஷுக்கு ஜோடியாக நடிப்பவர் ஹன்ஷிகா.

தனுஷின் குட்டி படம் ஏறக்குறைய முடிந்துவிட்டது. தெலுங்கில் வெற்றிபெற்ற ஆர்யா படத்தின் ‌‌ீமேக் இது. யாரடி நீ மோகினியை இயக்கிய ஜவஹர் படத்தை இயக்கியிருக்கிறார். தனுஷுக்கு ஜோடி, ஸ்ரேயா.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆடுகளம் பட வேலைகளும் தொடங்கிவிட்டன. இந்நிலையில் மாப்பிள்ளை படத்தின் படப்பிடிப்பையும் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த வாரம் ஹைதராபாத்தில் மாப்பிள்ளை படத்தின் ஷூட்டிங்கை சுரா‌ஜ் தொடங்குகிறார். தனுஷ், ஹன்ஷிகா படப்பிடிப்பில் கலந்து கொள்கின்றனர். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆடுகளம் படத்திற்குமுன் மாப்பிள்ளை படத்தை ‌ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்