மாயாவிக்குப் பிறகு பூஜா ஹெக்டேக்கு தமிழில் எந்த வாய்ப்பும் அமையவில்லை. சுத்தமாக ஓரங்கட்டப்பட்டவருக்கு இந்தியில் அடித்தது ஜாக்பாட். அஷுவதோஷ் கவாரிகர் அடுத்து இயக்கும் சரித்திரப் படமான மொகஞ்சதாரோவில் ஹிர்த்திக் ரோஷனுடன் நடிக்கும் மெகா வாய்ப்பு கிடைத்தது. இந்த நேரத்தில் தனது அடுத்தப் படத்துக்கு அவரிடம் கால்ஷீட் கேட்டுள்ளார் மணிரத்னம்.