ஹாலிவுட்டில் தமிழ் பாட‌ல்

வியாழன், 8 மே 2014 (15:41 IST)
ஏ.ஆர்.ரஹ்மான் பல ஆண்டுகளுக்கு முன் இசையமைத்த படம் என் சுவாச காற்றே பாடல்களுக்காவே அதிகம் பேசப்பட்ட படம். இதில் பாடகர் உண்ணி மேனனும், சித்ராவும் பாடிய திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே என்று தொடங்கும் பாடல்தா‌ன் தற்போது, ரஹ்மான் இசையமைக்கும் ஹாலிவுட் படமான மில்லியன் டாலர் ஆர்ம் என்ற படத்தில் இடம் பெறுகிறது. 
ஆங்கிலப் படத்துக்காக பாடல் வரிகளிலும், இசையிலும் எந்த விதமான மாற்றங்களும் செய்யாமல் அப்படியே வெளிவர இருக்கிறது. இந்தப் பாடல் இரண்டு சிறுவர்கள் மைதானம் ஒன்றில் ஓடுவது போன்ற காட்சியின் பின்னணியில் ஒலிப்பது போல் இடம் பெற இருக்கிறது. ஒரு ஹாலிவுட் படத்தில் நமது தமிழ் பாடல் இடம் பெறுவது மகிழ்ச்சிக்கு‌ரிய விஷயம்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்