ஹரிப்ரியாவை குதூகலப்படுத்திய சேரன்

திங்கள், 1 நவம்பர் 2010 (14:37 IST)
கனகவேல் காக்க நாயகி ஹரிப்ரியாவுக்கு இது அதிர்ஷ்ட நேரம். தமிழ், தெலுங்கு, கன்னடம் என் மூன்று மொழிகளிலும் வாய்ப்புகள் வந்து சேர்ந்த வண்ணம் உள்ளதாம்.

தற்போது சேரன், பிரசன்னா நடிக்கும் முரண் படத்தில் சேரனுக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தில் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி மகிழும் கேரக்டராம் நாயகிக்கு.

ஷூட்டிங்கில் ஹரிப்ரியாவின் நடிப்பைப் பார்த்து பாராட்டியிருக்கிறாராம் சேரன். தேசிய விருது வாங்கிய இயக்குநரே பாராட்டிவிட்டார் என பார்க்கிறவர்களிடம் எல்லாம் சொல்லி குதூகலமடைகிறார் ஹரிப்ரியா.

வெப்துனியாவைப் படிக்கவும்