ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து வரும் ரோமியோ ஜுலியட் படத்தில் வில்லன் என்று யாருமில்லை, ஹீரோயின் ஹன்சிகாதான் வில்லி என கூறினார் படத்தை இயக்கும் லட்சுமணன்.
கள்வனின் காதலி படத்தை தயாரித்த லட்சுமணன் இயக்குனராகும் முதல் படம் ரோமியோ ஜுலியட். இதில் ஜெயம் ரவி நட்சத்திர ஹோட்டலின் ஜிம் கோச்சாக நடிக்கிறார். சிக்ஸ்பேக் தேவைப்படும் சினிமா நடிகர்களுக்கு அதற்கான உடற்பயிற்சி சொல்லித் தருகிறவர் ஜெயம் ரவிதான். இந்த கதாபாத்திரம் காரணமாக சில முன்னணி நடிகர்களை நடிகர்களாகவே நடிக்க வைக்க இருப்பதாக லட்சுமணன் கூறினார்.