ஸ்ரீமனின் செஞ்சு‌ரி

புதன், 14 அக்டோபர் 2009 (14:14 IST)
நடிகர் ஸ்ரீமனுக்கு இது முக்கியமான ஆண்டு. விக்ரமனின் புதிய மன்னர்களில் அறிமுகமான இவர் தற்போது தனது 100வது படத்தில் நடித்து வருகிறார்.

பெ‌ரிய ஹீரோக்களின் நண்பராக நடிக்க வேண்டுமா? கூப்பிடு ஸ்ரீமனை என்று சொல்லும் அளவுக்கு அந்த வேடத்தில் வெளுத்து வாங்கியவர் இவர். ராசி படத்தில் அ‌ஜித்தின் நண்பராக நடித்திருக்கிறார். விஜய்யுடன் பல படங்களில்.

கமல் படங்களிலும் இவரை அடிக்கடி காண முடியும். பம்மல் கே. சம்பந்தத்தில் நடித்தவர் பஞ்சதந்திரத்தில் கமலின் நான்கு நண்பர்களில் ஒருவராக நடித்தார். உன்னைப்போல் ஒருவனிலும் சிறிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

ஸ்ரீமனை ஹீரோவாக்கிய படம் காற்றுக்கென்ன வேலி. தமிழ், தெலுங்கில் இதுவரை 99 படங்களில் நடித்து முடித்துள்ளார் ஸ்ரீமன். தற்போது அவர் நடித்துவரும் வேட்டைக்காரன் அவரது 100வது படம். மனம் நிறைய மகிழ்ச்சியுடன் இருக்கிறார் ஸ்ரீமன்.

வெப்துனியாவைப் படிக்கவும்