ஸ்ரீதேவியை ரசித்த ர‌ஜினி

திங்கள், 1 அக்டோபர் 2012 (20:22 IST)
கடந்த சில நாட்களாகவே தமிழ் மீடியாவை தேடித் தேடி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீதேவி. பல வருடங்களுக்குப் பிறகு நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் மூன்று மொழிகளிலும் வெற்றி பெற வைக்கவே இந்த ஹார்ட் வொர்க்.
FILE

பழைய நட்பில் ர‌ஜினிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தனது படத்தை சென்னையில் திரையிட்டிருக்கிறார் ஸ்ரீதேவி. இந்தத் திரையிடலின் போது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உடன் இருந்தார்.

படத்தை டாப் டூ பாட்டம் ர‌ஜினி ரசித்ததாக சொல்கிறார்கள். வயதானாலும் மயிலை ரசிக்காமலிருக்க முடியுமா.

வெப்துனியாவைப் படிக்கவும்