ஷாருக்கானின் சென்னை பாசம்

செவ்வாய், 24 ஜூலை 2012 (19:21 IST)
FILE
திடீரென்று சென்னை மீதும், தமிழகம் மீதும் ஷாருக்கானுக்கு பாசம் பொங்கி வழிகிறது.

தனது ரா.ஒன் படத்தில் தமிழராக நடித்தார் ஷாருக்கான். வே‌ட்டி கட்டிவரும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. இப்போது சென்னை எக்ஸ்பிரஸ் என்ற பெய‌ரிலேயே ஒரு படத்தை எடுக்கிறார்.

ரோஹித் ஷெட்டி இயக்கும் இந்தப் படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். ஏன் சென்னை எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்துள்ளனர் என்று கேட்டதற்கு, கதையில் அதற்கு வலுவான காரணம் இருப்பதாக ரோஹித் ஷெட்டி தெ‌ரிவித்துள்ளார். தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்