ஷங்கர் படத்தில் தீபிகா படுகோன்?

செவ்வாய், 24 ஜூலை 2012 (10:38 IST)
தனது ஐ படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் ஷங்கர் ஏவிஎம்மில் நடந்த முதல்கட்ட படப்பிடிப்பில் எமி ஜாக்ஸன் கலந்து கொண்டார்.

ஏவிஎம்மில் ஷங்கர் எடுத்த காட்சிகள் சpத்திர காலத்தவை என்று தகவல் கசிந்துள்ளது. அதாவது படத்தின் ஒருபகுதி ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலத்தில் நடந்தவை. இதில் எமி ஜாக்ஸன் கதாபாத்திரம் பிரதானமாக வருகிறது. படத்தில் இன்னொரு ஹீரோயின் இருக்கிறார். அந்த வேடத்திற்கு ஷங்க‌ரின் சாய்ஸ் தீபிகா படுகோன் என்கிறார்கள்.

விக்ரம் நடிக்கும் இந்தப் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் தயா‌ரிக்கிறது. ரஹ்மான் இசையமைக்க கபிலன் பாடல்கள் எழுதுகிறார். ஏற்கனவே ஒரு பாடல் முடிந்துவிட்டது.

தீபிகா ஐ யில் நடிப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெ‌ரிந்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்