ஒருமுறை சினிமாவில் நடித்தால் அது விடாது கருப்பாக துரத்திக் கொண்டேயிருக்கும். மீனாட்சியை மட்டும் விடுமா? இதோ மீண்டும் வந்துவிட்டார். இந்தமுறை எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் வெள்ளைக்கார துரை படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார் மீனாட்சி. சும்மாயிருப்பதற்கு ஒரு பாடல் மேல் என்று நினைக்கிற அளவுக்கு மீனாட்சியின் மார்க்கெட் படு டல்.
விக்ரம் பிரபு அரிமா நம்பி, சிகரம் தொடு படங்களில்தான் சமீபமாக நடித்து வந்தார். அதில் அரிமா நம்பி வெளியாகியிருக்கிறது. வெள்ளைக்கார துரையில் நடிக்க ஆரம்பித்ததாக தகவலே இல்லை. ஆனால் அக்டோபரில் படத்தை வெளியிட்டு விடுவோம் என்கிறார் எழில். எப்படிப்பா...?