முன்னணி நடிகர்களின், இயக்குனர்களின் படங்கள் மட்டுமே வெளிநாடுகளில் திரையிடப்படும் காலம் மலையேறிவிட்டது. இளம் ஹீரோக்களின் படங்களும் இப்போது பரவலாக வெளிநாடுகளில் திரையிடப்படுகிறது. முண்டாசுப்பட்டி போன்ற ஸ்டார் வேல்யூ இல்லாத சின்ன பட்ஜெட் படங்களும் அதன் வித்தியாசமான கதையமைப்புக்காக வெளிநாடுகளில் திரையிடப்படுவது வரவேற்க வேண்டிய அம்சம்.