விஷாலின் பிறந்தநாளில் வெளியாகும் பூஜை டீஸர்

வெள்ளி, 18 ஜூலை 2014 (15:12 IST)
நடிகர்களின் பிறந்த தினங்களில் அவர்கள் நடித்த படத்தை வெளியிடுவதும், பாடல்கள், டீஸரை வெளியிடுவதும் சாதாரணமாக நடப்பதுதான். முன்பு அஜீத்தின் பிறந்தநாளான மே 1 அவர் நடித்த படம் தவறாமல் வெளியாகும். எஸ்.எஸ்.சக்ரவர்த்தியுடனான உறவை அஜீத் முறித்துக் கொண்டதோடு அந்த வழக்கமும் முடிந்து போனது.
விஷால் ஹரியின் பூஜை படப்பிடிப்பில் தற்போது பிஸியாக இருக்கிறார். காரைக்குடியில் பூஜை படப்பிடிப்பு நடந்து வருகிறது. தீபாவளிக்கு படத்தை வெளியிடும் மும்முரத்துடன் படப்பிடிப்பு நடத்தி வருகிறார் ஹரி.
 
இதன் பர்ஸ்ட்லுக் டீஸரை ஆகஸ்ட் 29 விஷாலின் பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். பூஜையில் விஷாலுடன் ஸ்ருதி, ராதிகா சரத்குமார் நடித்து வருகின்றனர். முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்தில் சத்யராஜ். 
 
ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்ரியன் கேமராமேன். யுவன் ஷங்கர் ராஜா இசை. விஷாலே தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் படத்தை தயாரித்து வருகிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்